சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்து பகைவரைவென்றான் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் முக்கிய சாலையாக உள்ளது. சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.