பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-07-27 11:07 GMT

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு செல்லும் வழியில் முறையான சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. இங்கு, கல்வி பயிலும் சிறு குழந்தைகள் சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக சிமெண்டு சாலை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.விஜயகுமார், மழையூர். 

மேலும் செய்திகள்