சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லவும் கிராமம் அருகில் உள்ள ஏரிக்கரை மீது தார்சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஜல்லிசாலை அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. அந்த ஜல்லிசாலையில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. ஜல்லிசாலையை தார்சாலையாக அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சோமசமுத்திரம்.