திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தென்ஒத்தவாடை தெருவில் சாலை அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய சாலை கொத்தப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளபடாமல் சுமார் 10 நாட்களுக்கு மேலாக அப்படியே போடப்பட்டு உள்ளது. தற்போது அந்தப் பகுதியில் மேடும், பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். நடப்பதற்கும் சிரமங்களை ஏற்படுகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
-அருணாசலம், திருவண்ணாமலை.