வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகர், ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகிறது. அதற்காக, தோண்டப்பட்ட சாலையை இன்னும் சீர் செய்யாமல் உள்ளனர். தற்போது மழைக்காலம் வர உள்ளது. சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி விடும். அந்த வழியாக வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமப்படுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாய்நாதபுரம் வேலூர்