புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆதனக்கோட்டையில் இருந்து கரும்புடையான்பட்டி வழியாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கரும்புடையான்பட்டியில் இருந்து கோவிலுக்கு வரும் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் சாலை முற்றிலும் சேதமடைந்து கப்பிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.