நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடி பதிக்கப்பட்ட இடங்களில் சேதமடைந்து ராட்சத பள்ளம் உள்ளது. அங்கு பதிக்கப்பட்ட சிமெண்டுதள கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.