சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-24 19:27 GMT

காட்பாடி காங்கேயநல்லூர் வேளாளர் வீதியில் கடந்த 5, 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடவில்லை. மழைப் பெய்தால் தெருவில் குட்டை, குட்டையாக தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக நடந்து, வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்தச் சாலை திரு முருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.ஐ.டி.க்கு செல்லும் வழி மற்றும் கோவில்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வைகோ சம்பத், காட்பாடி. 

மேலும் செய்திகள்