ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-10-05 19:02 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப் பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை சாலை பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. இந்த வழியாக மணப்பாக்கம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம், ஆலப்பாக்கம் செல்லலாம். மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், விவசாயிகள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்தச் சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல தகுதியற்ற சாலையாக உள்ளது. புதுப்பட்டு ஏரிக்கரை சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேலன், புதுப்பட்டு.

மேலும் செய்திகள்