கற்களாக காட்சியளிக்கும் ஆஸ்பத்திரி வளாகம்

Update: 2023-01-18 17:24 GMT

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை உட்காருவதற்கான வசதிகள் ஏதுவும் இல்லை. மேலும் குறிப்பாக அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கற்களுடன் கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது. எனவே கரடுமுரடாக காட்சியளிக்கும் ஆஸ்பத்திரி வளாக முழுவதும் தார் சாலை அல்லது சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

-கவுதம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்