தோண்டப்பட்ட சாலை சரியாக மூடவில்லை

Update: 2026-05-10 11:43 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்புக்குட்டை கிராமத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முதல் வெலக்கல்நத்தம்-திருப்பத்தூர் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இந்தச் சாலை உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக இந்தச் சாலை தோண்டப்பட்டது. சாலையை சரியாக மூடவில்லை. மழைக் காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகன‌ ஓட்டிகள், மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்கும் பணி ஒரு மாதத்துக்கு முன்பு பெயரளவில் தொடங்கப்பட்டு கிடப்பில் போட்டு விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும்.

-வீரராகவன், மல்லப்பள்ளி.

மேலும் செய்திகள்