அரக்கோணம்-திருவாலங்காடு நெடுஞ்சாலையில் மோசூர் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சரி செய்வது மட்டுமின்றி, தேவையான இடங்களில் எதிரொளிப்பான்கள், சாலையில் வெள்ளைநிற கோடுகள் வரைதல் போன்ற பணிகளை செய்து விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும்.
-கண்ணன், மோசூர்.