வேலூர் மாநகராட்சி பழைய காட்பாடி புருஷோத்தமன்நகர் டி.பி.அபார்ட்மெண்டு அருகில் உள்ள சாலை, தார் சாலை அமைக்காமல் மண்சாலையாக உள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் எங்கள்பகுதிக்கு தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.
கோபால்சாமி, பழையகாட்பாடி.