வேகத்தடையில் வெள்ளைநிற பெயிண்டு பூச வேண்டும்

Update: 2025-08-10 11:26 GMT

அரக்கோணம் தாலுகா அம்பரீசபுரம் கிராமத்துக்கு ஜடேரி பகுதி வழியாக பழுதடைந்த சாலை சரி செய்யப்பட்டு, புதிய சாலை போடப்பட்டுள்ளது. புதிதாகப் போடப்பட்ட சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளின் மீது வெள்ளைநிற பெயிண்டு பூசப்படாத காரணத்தால் இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளின் மீது வெள்ளை நிற பெயிண்டு பூச வேண்டும்.

-குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்