வேலூர் மாவட்டம் சாத்துமதுரையில் இருந்து பொற்கோவில் செல்லும் சாலையில் பென்னாத்தூரில் மூன்று பகுதிகள் கூடும் ஒரு முக்கிய சந்திப்பு அமைந்துள்ளது. அந்தச் சந்திப்பில் ஒரு புறம் மட்டும் வேகத்தடை இல்லாததால் அந்தப் பக்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் பயணம் செய்கின்றனர். இதன் விளைவாக, அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட இடத்தில் விபத்துகளை தடுக்க சாலையின் குறுக்கே ஒரு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.