திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு நேர் எதிரே கட்டபொம்மன் தெரு உள்ளது. இந்தத் தெருவில் நுழைவு பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பகல் நேரங்களில் அதிகமாகவே காணப்படும். இந்தப் பகுதியில் பாதாள சாக்கடையின் மூடியின் மேல் வாகனங்கள் ஏறி செல்வதால் பாரம் தாங்காமல் மூடி சாக்கடைக்குள் புகுந்துள்ளது. இதனால் பாதாள சாக்கடை மூடி உடையும் நிலையில் உள்ளது. எனவே வாகனங்கள் அதன் மீது ஏறி மூடி உடைந்து விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, திருவண்ணாமலை