திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிழக்கு தெரு, திருவண்ணாமலை சாலை, வெறையூர் சாலை, கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-மகேஷ்பிரசாத், தச்சம்பட்டு.