திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு பகுதிகளில் இருந்து தண்டராம்பட்டு, திருவண்ணாமலை செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் அகரம் பள்ளிப்பட்டு ஒரு வளைவு பகுதியில் மண் குவியல் உள்ளது. சாலையின் நடுப்பகுதியில் இருப்பதால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மண் குவியலை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா அகரம்பள்ளிப்பட்டு