வேலூர் வள்ளலார் பகுதியில் வசந்தம் நகர் விரிவுப்பகுதியில் பி.எப். அலுவலகம் பின்பக்கம் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது. தற்போது மழைப் பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. அதில் மக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை, கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-ராஜா, வேலூர்.