ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-01-04 10:41 GMT

குடியாத்தம் தாலுகா வேப்பூர் கிராமத்தில் இருந்து ஒலகாசி கிராமத்துக்கு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தச் சாலை வழியாக விவசாயிகள் நிலத்துக்கு இடுப்பொருட்கள், நிலத்தில் விளைத்த வேளாண் பொருட்டுக்களை எடுத்துச் செல்லும் சாலையாகும். மேலும் இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய சாலையாக பயன்பட்டு வருகிறது, பழுதடைந்து இருக்கும் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்துகள் நடக்கின்றன. இந்தச் சாலையை சீரமைத்து சிமெண்டு சாலை அல்லது தார் சாலையாக மாற்றி தர வேண்டும்.

-எஸ்.அமர்நாத்ராஜன், வேப்பூர். 

மேலும் செய்திகள்