காட்பாடி காந்திநகர் அக்சீலியம் கல்லூரி செல்லும் மெயின் ரோட்டில் சேரும் சகுதியுமாக காணப்படுகிறது. இதனால் கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் ஒரு சிலர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வழுக்கி கீழே விழுந்து விடுகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலவன், வேலூர்