சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-08-28 12:24 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளி பகுதியில் 1-வது மெயின் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாதாரண நாட்களில் கூட இருசக்கர வாகனங்களில் செல்ல சிரமமாக இருக்கும். தற்போது மழை பெய்து வருவதால் அந்த பள்ளங்கள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். அங்கு விரைந்து சாலை அமைக்க வேண்டும்.

-பாலசந்திரன், ேவலூா்.

மேலும் செய்திகள்