ஜோலார்பேட்டையை அடுத்த ஊசிநாட்டான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு போதிய சாலை வசதியே இல்லை. கரடு, முரடாக உள்ள ஒரு பாதையை பயன்படுத்தி வருகின்றனர். அதில் கற்களும், மேடு, பள்ளமும் அதிகமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. பள்ளத்தில் குட்டை குட்டையாக மழைநீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்கள் மழைநீர் தேங்கிய குட்டையில் வழுக்கி விழும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஊசிநாட்டான் கிராமத்துக்கு போதிய சாலை வசதியை ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்.
-கவுதம், ஜோலார்பேட்டை.