திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமம் ஓணித்தெரு பகுதியில் 2 மற்றும் 3-வது தெருவில் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் பகுதியில் இருந்து வீணாகும் தண்ணீரும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக வெளியேற வசதி இல்லாததால் குடிநீரும், கழிவுநீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. சாலையில் செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். தெருவில் தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. தெருவில் வடி கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.வெங்கடேசன், வடபுதுப்பட்டு.