பிரதிபலிப்பான்களை அமைக்க வேண்டும்

Update: 2025-04-27 13:38 GMT

காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள காட்பாடி மார்க்கெட் பகுதியில் இருந்து மாநில எல்லை வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இந்தச் சாலையில் செங்குட்டை பள்ளி பகுதி, கோவில் பகுதிகளில் சாலையைக் கடக்கும் பகுதிகளில் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. எனவே அந்த இடங்களில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்