வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் அருகில் உள்ள ரத்னா நகரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. ரத்னா நகருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி உள்ளது. இன்னும் வடியவில்லை. இந்த வழியாக தான் பள்ளி சிறுவர், சிறுமிகள் சென்று வருகிறார்கள். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், அப்துல்லாபுரம்.