வேலூர் காட்பாடி திருநகர் விவேகானந்தா தெரு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் முதியோர் சிரமப்படுகின்றனர். எங்கள் தெரு சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சரவணன், திருநகர் காட்பாடி