அரக்கோணம் அருகில் உள்ள கைனூர் கேட் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி நடந்தது. அந்தப் பணியை 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் சாலை அமைத்துத் தரக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூட அந்த வழியாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் விரைவில் சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
-ராஜி, கைனூர்.