ஆம்பூரை அடுத்த சின்னக்கொம்மேஸ்வரம் பகுதியில் ரெயில்வே பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாலத்தின் கான்கிரீட் மற்றும் சுவர் சிறிது சிறிதாக உடைந்து கீழே விழுகிறது. எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அதிவேக ரெயில்கள் இந்தப் பாலத்தின் மேலே செல்கின்றன. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் ரெயில்வே நிர்வாகம் பாலத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தன்ராஜ், ஆம்பூர்.