வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு கோபாலபுரம் பகுதியையொட்டி உள்ள ஜெ.பி.பில்டர்ஸ் மெயின் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக கட்டப்பட்ட தொட்டி அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோபாலபுரம் பெருமாள் கோவில் தெருவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி கொள்கின்றன. இரவில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தவறி விழ வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.ராமு, வேலூர்.