குடியாத்தம் தாலுகா ஒலகாசி ஊராட்சியில் ஓலகாசி-வேப்பூர் இடையே ஓடும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் குறுக்கே இருந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலகாசி, சித்தாத்தூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஒலகாசி-வேப்பூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அல்லது மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டுகிறோம்.
-சதீஷ்குமார், ஒலகாசி.