வேலூர் சார்பனாமேடு அருகே ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தின் அருகே சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை முழுவதும், பழைய பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், வேலூர்