காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சந்தை உள்பகுதியில் உள்ள கடைகளை பயன்படுத்தாமல் சாலையோரம் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-எம்.மோகன், காவேரிப்பாக்கம்.