தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை ஊராட்சி நியூ ஹவுசிங் யூனிட் பகுதி உள்ளது. இங்குள்ள காமராஜர் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் நடந்து கூட செல்லமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை தார்சாலையாக போட வேண்டும்.
நியூ ஹவுசிங் யூனிட் பொதுமக்கள், பொன்னவராயன்கோட்டை