வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-11-29 11:19 GMT

ராமநாதபுரம் நகர் யானைக்கல் வீதி மற்றும் நயினார்கோவில் சாலை பகுதியில் உள்ள இரண்டு சாலை வளைவுகளிலும் வேகத்தடைகள் இல்லாமல் உள்ளது. இச்சாலையில் எதிர்எதிரே வரக்கூடிய வாகனங்கள் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால்  பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே மேற்கண்ட இரண்டு சாலைகளின்  வளைவு பகுதியின் தொடக்கத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்