மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது ஜடையம்பட்டி கிராமம். இங்குள்ள அருந்ததியர் நகர் வழியாக செல்லும் போளையம்பள்ளி-ஜடையம்பட்டி இணைப்பு சாலையில் தார்கள் பெயர்ந்து கரடு, முரடாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த தார்சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.