பல்லாங்குழியான சாலை

Update: 2026-11-29 15:06 GMT

கெங்கவல்லியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு உள்ள சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. பல்லாங்குழியான இந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்