புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டியார் தெரு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை நான்கு ரத வீதிகளில் ஒன்றாக இருப்பதுடன், திருமண மண்டபங்கள், நீதிமன்றம், அரசு நூலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் சாலையாகவும் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை புதுப்பித்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.