கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கரடிப்பட்டியில் இருந்து சின்னாக்கவுண்டனூர் செல்லும் தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்குவதால் அவை தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளும் சைக்கிளில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.