அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து இளைய பெருமாள்நல்லூர் ஊராட்சியில் உள்ள பாகல்மேடு கிராமம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக மீன்சுருட்டி செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் சைக்கிளில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை புதுப்பித்து தார்சாலையாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.