வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-11-29 12:30 GMT

மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டியில் இருந்து ஜங்களாபுரம் செல்லும் சாலை சேதமடைந்து இருப்பதால் மழை நேரங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சாலையில் சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் இதனால் அவதி அடைகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்