மேல ஆசாரிபள்ளம் கல்லறை தோட்டத்திலிருந்து மேற்கு பகுதியில் வன்னான்விளை தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கசாமி, மேல ஆசாரிபள்ளம் .