விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். சேதமடைந்த சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.