கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி ஏபியா பேங்க் காலனியில் பிள்ளையார் கோவில் அருகே சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. மேடான பகுதியில் உள்ள இந்த பள்ளத்தில் கனரக வாகனங்கள் இறங்கி ஏறும்போது மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க சாலையில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.