புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியில் இருந்து கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரிச்சுவண்ணியம்பட்டி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல கடும் அவதியடைதந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.