புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகராட்சி கண்டியாநத்தம் ஊராட்சி ஆலவயலில் இருந்து கண்டியாநத்தம் வழியாக உலகம்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையில் தற்போது வாகனங்கள் செல்வதற்கே சிரமமாக உள்ளது. எனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.