திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து தம்மம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக சென்னை, பெங்களூரு, சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.