பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்புள்ள புறவழிச்சாலை மற்றும் நகருக்குள் செல்லும் நெடுஞ்சாலை பிரிவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் இப்பகுதியில் இருபுறங்களிலும் வேகத்தடை அமைக்க பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாற்றுகின்றனர். எனவே விபத்து ஏற்படாதவாறு இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.