மண்சாலையை சிமெண்டு சாலையாக மாற்ற கோரிக்கை

Update: 2026-10-25 15:48 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாரிப்பட்டி மேற்குக் களம் பகுதியில் உள்ள மண்சாலை தற்போது பெய்த மழையால் கடுமையாகச் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், விவசாயப் பொருட்கள் மற்றும் கால்நடைத் தீவனங்களைக் கொண்டு செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையைச் சீரமைத்து நிரந்தரமாகச் சிமெண்டு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்