கரூர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்புள்ள குறுக்குச் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.